18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டு ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் திமுக சார்பாக நிவாரண பொருட்கள்..

திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டு ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் திமுக சார்பாக நிவாரண பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2020, 1:01 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டு ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் திமுக சார்பாக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர், திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் மற்றும் ஒன்றிய பொருளாளர் கருணாநிதி  தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் உமாதேவி போத்திராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பசும்பொன் முன்னிலையில் 4வது வார்டு திமுக பொறுப்பாளர் திருப்பதி ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளைக் கழக பொறுப்பாளர்கள் ராசு, ராஜா கண்ணன், முருகன், சுந்தரகிருஷ்ணன், அய்யங்காளை, திருச்சங்கு, தனசீலன் மற்றும் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுராஜா, இளைஞரணி பொருளாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!