உலக ரெட் கிராஸ் தினம் ரெட் கிராஸ் ராமேஸ்வரம் தாலுகா கிளை சார்பில் நடந்தது.சேர்மன் ஜி. பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். துணை சேர்மன் முனைவர் ஜே. ஷாலினி முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுணாண்ட்
படத்திற்குரெட் கிராஸ் ராமேஸ்வரம் கிளை தலைவர் தாசில்தார் அப்துல் ஜப்பார், துணைத்தலைவர் எஸ். சூசை ரத்தினம், தேவ சபை டிரஸ்ட் பாஸ்டர் பில்லி கிரஹாம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.நிகழ்வில் கலந்து கொண்டோருக்குமுக கவசம் , இனிப்பு குழந்தைகளுக்கு சத்துணவு பாக்கெட் வழங்கப்பட்டது.நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரா.முருகேசன், தலைமை ஆசிரியை பி.ராஜ லெட்சுமி, உடற்கல்வி ஆசிரியை ஜி.கோபி லட்சுமி, மு.நம்புராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கிளை செயலர் எஸ். திரவிய சிங்கம், பொருளாளர் ஜெ.ஜே லியோன் ஆகியோர் நிகழ்ச்சி எற்பாடுகளை செய்தனர்
ராமேஸ்வரத்தில்ரெட் கிராஸ் தினம்
எழுதியவர்: mohan May 10, 2020, 4:57 pm




You must be logged in to post a comment.