18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் நாகாச்சி மக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் அரிசி விநியோகம்

உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் நாகாச்சி மக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் அரிசி விநியோகம்

எழுதியவர்: mohan May 10, 2020, 3:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழநாகாச்சி ஊராட்சியில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் தமாகா., ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவரும், உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத் தலைவருமான வி.என். நாகேஸ்வரன், ராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலர் கே.காந்தி ஆகியோர் தலா ரூ.1.5 லட்சம், ராமநாதபுரம் ஓட்டல் ஜூனியர் குப்பண்ணா பங்குதாரர் ஜெ. தினேஷ்பாபு ரூ.1 லட்சம் என ரூ.4 லட்சம் மதிப்பில் அரிசி 3 கட்டமாக தினமும் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட நிகழ்வு ஆக்கிடாவலசை சமுதாய கூடத்தில் இன்று (10/05/2020) நடந்தது. நாகாச்சி ஊராட்சி தலைவர் ராணி கணேசன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் .ரவிச்சந்திர ராமவன்னி, உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் வி.என்.நாகேஸ்வரன், உச்சிப்புளி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.ஏ.அபுதாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தொடங்கி வைத்தார்.இதில் உச்சிப்புளி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் காமில் ஹுசைன், டாக்டர் ஜெயபாலன், செந்தில் குமார், முன்னாள் செயலர்கள் கண்ணன், பாலகிருஷ்ணன், டாக்டர்.தாமரைச்செல்வன், தலைவர் தேர்வு ராஜேஸ்வரன், செயலர் தேர்வு வெள்ளைச்சாமி, நெல்லை தாமிரபரணி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.பாலசுப்ரமணியன், நாகாச்சி ஊராட்சி துணை தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!