18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் தொற்றால் கடும் சிரமத்திற்கு மத்தியிலும் தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது =அமைச்சர் ஆர்.பி.

கொரோனா வைரஸ் தொற்றால் கடும் சிரமத்திற்கு மத்தியிலும் தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது =அமைச்சர் ஆர்.பி.

எழுதியவர்: mohan May 10, 2020, 3:32 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆh.பி.உதயக்குமார் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.விழாவில் அவர் பேசும் போது கொரோனா வைரஸ் தொற்றால் கடும் சிரமத்திற்கு மத்தியிலும் தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்திலும் ஆட்சித்தலைவர் தலைமையின் கீழ் மக்கள் நலப்பணிகள் தொய்வின்றி செயலாற்றப்பட்டு வருகின்றன எனப் பேசினார்.முன்னதாக உசிலம்பட்டி கீழப்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 500 குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட மளிகைச் சாமான்கள் அடங்கிய பை தொகுப்புகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பூமா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!