17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசு நிவாரணம் வழங்க பேண்ட் செட் இசைக்குழுவினர் கோரிக்கை..

தமிழக அரசு நிவாரணம் வழங்க பேண்ட் செட் இசைக்குழுவினர் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2020, 1:29 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றியுள்ள சத்திரப்பட்டி தளவாய்புரம் முகவூர் சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 150 பேண்ட்செட் இசைக்குழு குழுவினர் இருந்துவருகின்றனர். குழுவிற்கு 10 பேர் வீதம் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலை நம்பியுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு காரணமாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் இதனை நம்பியுள்ள இசைக் கலைஞர்கள் வேலையின்றி நலிவடைந்தது வாழ்வாதாரம் இழந்து வறுமை நிலையில் உள்ளனர். இன்று ஸ்ரீமாயூரநாத சுவாமி திருக்கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட பேண்ட் செட் இசை கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் இந்தத் தொழிலையே நம்பி தங்கள் குடும்பம் உள்ளது தற்போது எங்கள் குடும்பத்தினர் பசி பட்டினியுடன் வாழ்வதால் தமிழக அரசு நிவாரணம் வழங்கி தங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!