17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது..

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் July 31, 2017, 5:56 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.07.2017) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன் பின்பு பயனாளி ஒருவருக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார். ​இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

​கடலாடி வட்டம், மாராந்தை கிராமத்தைச் சேர்ந்த திருமதி.கருப்பாயி என்பவர் தனது பேரக்குழந்தையின் கல்விக்கு உதவித்தொகை வேண்டி விண்ணப்பத்திருந்தார். அதன்படி இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்னாரது பேரக்குழந்தையின் கல்வி உதவித்தொகையாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10,000/-க்கான காசோலையினை வழங்கினார்.

​இக்கூட்டத்தில் சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


​​

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!