கொரோனா நோய்த்தொற்று பரவலாக எல்லோரிடமும் அச்சம் இருக்கும்போது நாம் உண்ணும் உணவை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் மண்வாசம் மாறாமல் குழுக்களாக கிராமியப் பாடல்களைப் பாடி குறுவை சாகுபடி மேற்கொண்டுவருகிறார்கள்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சம் ஹெக்டர் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வைத்து தற்போது மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர் செம்பதனிருப்பு வில்லியநல்லூர் அருவாபாடி ஆலஞ்சேரி செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுபறித்தல், நடவுப்பணி, வயல் வரப்புகளை சீரமைத்தல் ,உரம்யிடுதல் போன்ற விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் களைப்பு தெரியாமல் இருக்க நடவு பணிகள் மேற்கொள்ளும் விவசாயப் பெண்மணிகள் நாட்டுப்புறப் பாடல்களை குழுவாக பாடி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம்
எழுதியவர்: mohan May 10, 2020, 11:26 am




You must be logged in to post a comment.