17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூர் கருப்பாநதி அணை பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு-வனத்துறையினர் விசாரணை..

கடையநல்லூர் கருப்பாநதி அணை பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு-வனத்துறையினர் விசாரணை..

எழுதியவர்: Askar May 10, 2020, 5:02 am

கடையநல்லூர் கருப்பாநதி அணை பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு-வனத்துறையினர் விசாரணை..

கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகில் 5 வயதுப் பெண் காட்டு யானை உயிரிழந்துள்ளது. இது குறித்து கடையநல்லூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில், மே.9 சனிக் கிழமையன்று கருப்பாநதி அணை அருகே காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற கடையநல்லூர் வனத்துறையினர் இறந்து கிடந்த காட்டு யானையை பார்வையிட்டனர் .

கருப்பாநதி அணையின் கரைப்பகுதியில் ஐந்து வயது உடைய பெண் காட்டு யானை இறந்தது தெரியவந்தது. கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த யானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பெண் காட்டு யானை எவ்வாறு இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!