17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியில் கல்வி தந்தை நினைவு தின விழா…

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியில் கல்வி தந்தை நினைவு தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் July 31, 2017, 5:47 pm

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 29-07-2017அன்று காலை கல்வித் தந்தை பி எஸ் அப்துல் ரஹ்மான் நினைவு தினவிழா கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் மாணவப்பேரவை உறுப்பினர் நூர் செரின், முதுகலை கணினித்துறை மாணவி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் தலைமையுரையாற்றினார். முனைவர் ஏ இ ஜி சி ரஜினி கலைப்புல முதன்மையர் அவர்களும் முனைவர் என் கௌரி தேர்வாணையர் அவர்களும் பாராட்டுரை வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினராக முனைவர் எஸ் சுலைஹா சகில் ஆங்கிலத்துறைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு தாம் மாணவியாக இருந்த போது கல்வித் தந்தையுடன் இருந்த நினைவலைகள் பற்றியும் மாணவிகள் அவர் கொள்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் கூறினார். மாணவப்பேரவை உறுப்பினர் ஹலீமா வணிகவியல் துறை மாணவி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்களும் முதுகலை மாணவிகளும் பங்கேற்றனர்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!