18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா-வில் இயங்கி வரும் தீயணைப்புதுறை சார்பாக கிருமிநாசினி மருந்து தெளிப்பு!

ஆத்தூர் தாலுகா-வில் இயங்கி வரும் தீயணைப்புதுறை சார்பாக கிருமிநாசினி மருந்து தெளிப்பு!

எழுதியவர்: Askar May 9, 2020, 1:12 pm

ஆத்தூர் தாலுகா-வில் இயங்கி வரும் தீயணைப்புதுறை சார்பாக கிருமிநாசினி மருந்து தெளிப்பு!

தற்போது நாட்டில் நிலவுவரும் கொரொனா நோய்தொற்று காரணமாக தமிழஅரசு உத்தரவின் பேரில்திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஆத்தூரில் இயங்கி வரும் தீயணைப்புதுறையினர் சார்பாக ஆத்தூர்,கன்னிவாடி, அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 05 மணிமுதல் சித்தையன்கோட்டை பேரூராட்சி சார்ந்த அனைத்து பகுதிகளிலும் தீயணைப்புதுறையில் எந்திர கம்மியர் ஓட்டியாளராக பனிபுரியும் சோலேஸ்வரன் தலைமையில் கொண்ட குழுவினர் சார்பாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அரசின் உத்தரவுக்கிணங்க தீயணைப்பு துறையின் இச்செயல்பாட்டை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.

திண்டுக்கல், பக்ருதீன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!