17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 10 மாத சம்பளம் பாக்கி-பிஎஸ்என்எல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

10 மாத சம்பளம் பாக்கி-பிஎஸ்என்எல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2020, 7:37 am

சம்பளம் வழங்காததை கண்டித்தும், பழைய ஒப்பந்த தொழிலாளர் திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில், எம்ப்ளாயிமென்ட் யூனியன் மற்றும்  டிஎன்டிசிடபுள்யூ யூனியன் சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாத சம்பளத்தை வழங்காததை கண்டித்தும், பழைய ஒப்பந்த தொழிலாளர் திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தியும்,  சில மாதங்களுக்கு முன் கட்டாய விருப்ப ஓய்வு பெற்ற 90 ஆயிரம் அலுவலர்களுக்கும் பணபலங்களை வழங்க வலியுறுத்தியும்,  காலியான பணியிடங்களுக்கு ஓப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வலியுறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு  மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.பால்துரை முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் நசுருதீன் வரவேற்றார். ஆறுமுக பாண்டி, மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி கோசங்கள் எழுப்பினர்.

அதை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், கூடுமானவரை தனித்திருந்து தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!