17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீதிமன்ற உத்தரவு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

நீதிமன்ற உத்தரவு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 11:31 pm

கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து அனைத்து தொழில்கள் முடங்கின. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன, வழிபாட்டு தலங்களில் தரிசனம், பிரார்த்தனைகள் நிறுத்தப்பட்டன. சமூக விலகலை பின்பற்றா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்டன. மூன்றாம் நிலை ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்தது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக மூடிய மதுக்கடைகள் நேற்று (07.05.2020) மீண்டும் திறக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை திறக்க பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக விலகல் பின்பற்றப்படாததால் கொரானா தொற்று பல்கி பெருகும் அபாயம் உணர்ந்து, மதுக்கடைகளை மீண்டும் மூட தடை கோரி பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். சமூக இடைவெளி இல்லாததை காரணம் காட்டி மதுக்கடைகளை தேசிய ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாம்பன் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!