17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளத்தில் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா..காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு..

ஆலங்குளத்தில் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா..காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 11:26 pm

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஆலங்குளம் பகுதியில் கொரோனா குறித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படம் மே.08 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்துறை மற்றும் போதி என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கப்பட்ட “பந்து” என்ற கொரோனா விழிப்புணர்வு குறும் படத்தினை காவல் ஆய்வாளர் ரோஸிலின் சாவியோ ரிப்பன் வெட்டி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் பரத்லிங்கம், பட தயாரிப்பாளர் கார்த்திகேயன், இயக்குநர் ரத்தினவேல், தென் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் ராஜ் காவலர், ஊர்காவல் படை வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!