17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 12,276 வழக்குகள் பதிவு..

மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 12,276 வழக்குகள் பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 11:17 pm

08.05.2020. மதுரை மாவட்டம். மத்திய மாநில அரசுகள் கொரான வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப. உத்தரவுப்படி, இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது இதுவரை 12,276 வழக்குகள் பதிவு செய்தும்,வழக்கில் சம்பந்தப்பட்ட 16,540 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 6,387 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 07.5.2020 ம் தேதி மட்டும் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது 200 வழக்குகள் பதிவு செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட 267 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப. அறிவுறுத்தியுள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!