17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை…

மதுரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை…

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 11:13 pm

மதுரை, சம்மட்டிபுரம் அருகே 3 ஆவது மற்றும் 4வது தெருகள் சந்திக்கும் இடத்தில் குடிசையுடன் கூடிய காலி மனை உள்ளது. இந்த மனையில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பை கிடந்துள்ளது. இந்தப் பை குறித்து போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து எஸ் எஸ் காலனி போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பையில் உருண்டை வடிவிலான 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. அந்த நாட்டு வெடிகுண்டுகளை நிபுணர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!