17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இசுலாமிய சனநாயக பேரவையின் சார்பாக மேலக்கோட்டை ரமலான் நகர் இளமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..

இசுலாமிய சனநாயக பேரவையின் சார்பாக மேலக்கோட்டை ரமலான் நகர் இளமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 8:55 pm

விடுதலை சிறுத்தை கட்சி எழுச்சித்தமிழர் ஆணையின் பேரிலும்,  மாநிலச் செயலாளர்  அப்துல் ரஹ்மான்  வழிகாட்டுதலோடு இசுலாமிய சனநாயக பேரவையின் சார்பாக மேலக்கோட்டை ரமலான் நகர், இளமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு மண்டல செயலாளர்  க. முகம்மது யாசின்  தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் துணைச் செயலாளர் சிறுத்தை முத்துவாப்பா  தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் மாவட்ட அமைப்பாளர் மு. சீனி முகம்மது சபீர், மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் ஜுனைத், மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் ரகுமான், ஒன்றிய செயலாளர் தமிமுன் அன்சாரி, தொகுதி அமைப்பாளர் அப்துல்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வினியோகம் செய்தார்கள். பயனாளிகள் அனைவரும் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!