18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக விலகலை கடைபிடிக்காத 3 கடைகளுக்கு சீல்- சாம்பவர் வடகரை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

சமூக விலகலை கடைபிடிக்காத 3 கடைகளுக்கு சீல்- சாம்பவர் வடகரை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

எழுதியவர்: Askar May 8, 2020, 7:49 pm

சமூக விலகலை கடைபிடிக்காத 3 கடைகளுக்கு சீல்- சாம்பவர் வடகரை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ள நிலையில் சமூக விலகலை சில்லறை விற்பனை கடைகள் கடைபிடிக்கவும் வேண்டும் என உத்தரவிட்டது.  அதன் படி அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சமூக விலகலை கடைபிடிக்காமலும், கொரோனா தடுப்பு முறைகளை கையாளாமல் இருந்த 3 கடைகளை சாம்பவர்வடகரை பேரூராட்சி நிர்வாக அதிகாரி பூதப்பாண்டி, போலீஸ் எஸ்ஐ செல்வி, சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பிற கடைகளும் சமூக விலகலை கடைபிடிக்காமலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்க் கொள்ளாமலும் இருந்தால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!