தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோம அள்ளி அரசு மதுபான கடையில் இன்று விற்பனை துவங்கிய முதல் நாள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மது பிரியர்களுக்கு முறையாக டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளிவிட்டு ஒவ்வொருவக்காக மதுபானம் விற்கப்பட்டு வந்தது இந்நிலையில் பாலக்கோடு அருகே உள்ள பி.கொல்ல அள்ளி கிராமத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டன் மாதேஸ்வரன் (39 ) என்ற வாலிபர் டோக்கன் பெறாமல் நேரடியாக மது கேட்டு கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டார் காவல் பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முருகன் வாலிபரை டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் வருமாறு கூறினார் இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகனை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார் மேலும் அவரைபணி செய்ய விடாமல் தடுத்து உள்ளார் இதனை அறிந்த பாலக்கோடு காவல் ஆய்வாளர் விசுவநாதன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதேஸ்வரன் கைது செய்து செய்து சிறையில் அடைக்கப்பட்டார் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




You must be logged in to post a comment.