18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான சத்துணவு வழங்கப்பட்டது..

செங்கம் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான சத்துணவு வழங்கப்பட்டது..

எழுதியவர்: Askar May 8, 2020, 7:33 pm

செங்கம் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான சத்துணவு வழங்கப்பட்டது..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான சத்துணவு வழங்கப்பட்டது.

செங்கம் அடுத்த மண்மலை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு செங்கம் ரெட்கிராஸ் தலைவர் பாபு வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். ரெட்கிராஸ் செயலாளர் தனஞ்செயன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் இந்திரராஜன் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான சத்துணவு வழங்கினார். ரெட்ராஸ் சங்க நிர்வாக செயலாளர் சர்தார் ருஹூல்லா, பழனி , கிருபாகரன், சரவணகுமார் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொருளாளர் ஆதவன் நன்றி கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!