17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 7:23 pm

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த மக்கள் நீதி மையம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் கார்த்திக் ராஜா சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது வேண்டுமென்றால் ஆன்லைன் மூலமாகவே மது விற்பனை செய்யலாம் எனவும் அனுமதி வழங்கியுள்ளது அல்லது ஹோம் டெலிவரியும் செய்யலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் நீதி மையம் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா தீர்ப்பின் நகல் முழுவதும் வந்த பிறகு முழுமையான அறிக்கை அறிவிக்கப்படும் என தெரிவித்தார் தனிமனித இடைவேளையை பின்பற்றாத காரணத்தினாலும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத காரணத்தினாலும் இதனால் நாளை முதல் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது அல்லது தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என கேள்வியும் எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!