17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:-மது பிரியர்கள் அதிர்ச்சி..

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:-மது பிரியர்கள் அதிர்ச்சி..

எழுதியவர்: Askar May 8, 2020, 7:24 pm

மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன. நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 176 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!