17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் போக்குவரத்து போலீஸ்காரருக்கு ராமநாதபுரத்தில் அரிவாள் வெட்டு

இராமேஸ்வரம் போக்குவரத்து போலீஸ்காரருக்கு ராமநாதபுரத்தில் அரிவாள் வெட்டு

எழுதியவர்: mohan May 8, 2020, 6:14 pm

இராமநாதபுரம் அருகே கூரியூரைச் சேர்ந்தவர் உமர் அலி. இவரது மகன் ரபீக் முகமது, 28. இவர் ராமேஸ்வரத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றுகிறார். கூரியூரைச் சேர்ந்த ஹனீபா பால்ராஜ் மகன் பாட்ஷா,35. நண்பர்களான இருவரும் இன்று மதியம் , குடிபோதையில் இருந்தனர். அப்போது அவர்கள் குடும்ப பிரச்னை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாட்ஷா, ரபீக் முகமதுவை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயமடைந்த ரபீக் முகமது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக இராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, பாட்ஷாவை கைது செய்து பிரச்னைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!