இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டையில் தேசிய ஊரடங்கு உத்தரவினால் வருவாயின்றி வீடுகளில்
முடங்கிய ஆதரவற்ற பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளகள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் 160 பேருக்கு, ஒன்றிய கவுன்சிலர் கணேசன் தலைமையில், புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் வீரபாண்டி தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கினார். வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு இரு முறை நிவாரணம் வழங்கிய ஊராட்சி தலைவர் வீரபாண்டி, மீண்டும் ஊரடங்கு தொடர்ந்தாலும், அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பு வழங்கப்படும் என்றார். இதில் கமுதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன், ஊராட்சி செயலர் விஜயரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கமுதி அருகே மக்களுக்கு ஊராட்சி தலைவர் நிவாரணம்
எழுதியவர்: mohan May 8, 2020, 5:59 pm




You must be logged in to post a comment.