இராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் அழகர். இவரது மகன் ஆனந்த், 26. இதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜெயக்குமார், 25.இவர்கள் இருவருக்கும் இடையே குடிபோதையில் அழகப்பா உறுப்பு
கல்லூரி அருகே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டினார். இதில் தலை, முகத்தில் காயமடைந்த ஜெயக்குமார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.ஜெயக்குமாரின் உடல், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளி ஆனந்த்,பரமக்குடி நகர் போலீசில் சரணடைந்தார். பலியான ஜெயக்குமார் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.கொலைக்கான காரணம் குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பரமக்குடியில் குடிபோதை தகராறு. வாலிபர் கொலை
எழுதியவர்: mohan May 8, 2020, 5:52 pm




You must be logged in to post a comment.