மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பறவைகள் அதிகம் வருகின்றன. அவற்றை சீர்காழியை சேர்ந்த ஜார்ஜ் பிரபாகரன்,
வெற்றிச்செல்வன், ஹரிஹரன்,ரமேஷ் ஆகிய 4 பேரும் இரண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தனர்,இது தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறைக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ரகசிய தகவல் அளித்துள்ளனர், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று கொக்கு,காட்டுபுறா,கெளதாரி உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட பறவைகளை வேட்டையாடி அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட பறவைகளையும் வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் கார் ஆகியவற்றை சீர்காழி வனத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் கைது செய்யப்பட்ட அனைவரையும் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவர்கள் நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தரணிதரன் உத்தரவிட்டார் அதை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை.




You must be logged in to post a comment.