17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் உணவின்றி தவித்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு பா.ஜ.க.வினர் நிவாரண உதவி

நிலக்கோட்டையில் உணவின்றி தவித்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு பா.ஜ.க.வினர் நிவாரண உதவி

எழுதியவர்: mohan May 8, 2020, 3:35 pm

நிலக்கோட்டை பகுதியில் நாட்டுப்புற கரகாட்டம், ஒயிலாட்டம், கலைஞர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வேலையின்றி வீட்டில் உணவின்றி தவிப்பதாக அறிந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு சேர்ந்தவரும், பாஜகவின் மாவட்ட பொறுப்பாளருமான அழகுமணி தனது நிதியிலிருந்து 25 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், ஒன்றிய தலைவர் பரசுராமன்,, ஒன்றிய துணைத் தலைவர் சாமிநாதன்,, ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் முரளிதரன் உள்பட பலர் இருந்தனர்.அரிசி மற்றும் உணவுப் பொருட்களை பெற்று சென்ற கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கடந்த 43 நாட்களுக்கு மேலாக பணிக்கு செல்ல முடியாததால் வாழ்வாதாரம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது அரசும், அரசு சார்ந்த தொண்டு நிறுவனங்களும் எங்களை போன்ற ஏழை எளிய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!