18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீரசிகாமணி ஊராட்சி அரசு பள்ளியில் ஏழை எளிய மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்..

வீரசிகாமணி ஊராட்சி அரசு பள்ளியில் ஏழை எளிய மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்..

எழுதியவர்: Askar May 7, 2020, 10:00 pm

வீரசிகாமணி ஊராட்சி அரசு பள்ளியில் ஏழை எளிய மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்..

வீரசிகாமணி ஊராட்சியில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 07.05.2020 வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு, நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரணமாக அரிசி,காய்கறிகள்,பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திகேயன் (மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்), தலைமை ஆசிரியர் க.தங்கராஜ்,லட்சுமணன் (செயலர் வீரசிகாமணி ஊராட்சி),உதவியாளர் காசிப்பாண்டியன் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் செ.மாரியம்மாள்,பி.கே. கோமதி,க.மகாலட்சுமி, ப.கணேசன், மு.சிவசுப்ரமணியன், சி.முருகன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சி வீரசிகாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் வீரசிகாமணி ஊராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!