17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாய் வழங்கிட வலியுறுத்தி போராட்டம்!

கொரோனா நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாய் வழங்கிட வலியுறுத்தி போராட்டம்!

எழுதியவர்: Askar May 7, 2020, 8:24 pm

கொரோனா நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாய் வழங்கிட வலியுறுத்தி போராட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில் போராட்டம் நடத்தினர். அதில் ஒரு பகுதியாக ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊராட்சி மன்றம் முன்பு அனைவரும் சமுக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பல்வேறு கோரிக்கையை முன்வைத்து கோஷமிட்டனர். அதில் முக்கிய அம்சமாக தற்போது கொரொனா நோய்தொற்று காரணமாக 144 தடையுத்தவு அமலில் உள்ளதால் எவ்வித வருவாய் இன்றி வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலை உள்ளதால் அரசு உடனடியாக ரூபாய் 5000 நிவாரணம் தந்து உதவிட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.இந்த போராட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல், பக்ருதீன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!