17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு அழைத்து ஆபாசமாக பேசிய நபர் கைது…

காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு அழைத்து ஆபாசமாக பேசிய நபர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2020, 4:42 pm

மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு M.சத்திரப்பட்டி காவல் நிலைய எல்கையில் உள்ள உசிலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்(29) என்ற நபர் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி திட்டியுள்ளார்.

இதை விசாரிக்க சென்ற M. சத்திரப்பட்டி காவல் நிலைய காவலர்களையும் அசிங்கமாக பேசி, கீழே கிடந்த கம்பியை எடுத்து என்னை பிடிக்க வந்தால் உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி விட்டு ஓடிய நபரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து M.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!