18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே பெண்கள் எதிர்ப்பால் மதுக்கடை மூடல்..

இராமநாதபுரம் அருகே பெண்கள் எதிர்ப்பால் மதுக்கடை மூடல்..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2020, 4:28 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் பணியாளர்கள் இன்று (07/05/2020) காலை திறக்க முயன்றனர்.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன் திரண்டனர். கடையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கடை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது. அங்கிருந்த போலீசார் பெண்களை சமாதானப்படுத்த முயன்றனர்.  ஆவேசமடைந்த பெண்கள். கடையை திறந்தால் சூறையாடுவோம் என முழக்கமிட்டனர். குடியால்

பாதித்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், இரு கரம் கும்பிட்டு மதுக்கடையை திறக்கக் கூடாது என அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கூறினர். வீதிக்கு வந்துவிடும் எங்கள் குடும்ப நிலையை கருதி கடையை திறக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் மதுபானக்கடை மூடப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!