18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊத்துமலை அருகே வாழைக்காய் ஏற்றி வந்த வாகனத்தில் பீடி கடத்திய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல்..

ஊத்துமலை அருகே வாழைக்காய் ஏற்றி வந்த வாகனத்தில் பீடி கடத்திய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல்..

எழுதியவர்: Askar May 7, 2020, 9:33 am

ஊத்துமலை அருகே வாழைக்காய் ஏற்றி வந்த வாகனத்தில் பீடி கடத்திய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல்..

சுரண்டை அருகே உள்ள ஊத்துமலை காவல் நிலையத்திற்குட்பட்ட அமுதாபுரம் கொரோனா சிறப்பு சோதனை சாவடியில் போலீசார் தீவீர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சங்கரன்கோவில் நோக்கி வந்த டாடா பிக்அப் வாகனத்தை சோதனை செய்ததில் 9 மூடை பீடி இருந்தது தெரியவந்தது.

உடனே வாகனத்தில் வந்த கீழ பட்டமுடையார்புரம் ராமசாமி மகன் ஜெயச்சந்திரன் (வயது 50), தேனி மாவட்டம் வேப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் சென்றாயன் -( 32), அதே பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மகன் அன்புநாதன்(28) ஆகியோரிடம் விசாரித்ததில் வாகனத்தில் தேனியில் இருந்து வாழைக்காய் ஏற்றி வந்து ஆலங்குளத்தில் இறக்கிவிட்டு பின்னர் தேனிக்கு திரும்ப சென்ற வண்டியில் 9 பீடி மூடையை உள்ளே போட்டு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த ஊத்துமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!