17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேண்டாம் வேண்டாம் டாஸ்மார்க் கடை எங்களுக்கு வேண்டாம், மூடிவிடு மூடிவிடு டாஸ்மார்க் கடைகளை மூடி விடு: திருவண்ணாமலையில் பெண்கள் நூதன ஆர்ப்பாட்டம்..

வேண்டாம் வேண்டாம் டாஸ்மார்க் கடை எங்களுக்கு வேண்டாம், மூடிவிடு மூடிவிடு டாஸ்மார்க் கடைகளை மூடி விடு: திருவண்ணாமலையில் பெண்கள் நூதன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Askar May 6, 2020, 11:07 pm

தமிழகத்தில் கடந்த 44 நாட்களாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மருந்துக்கடைகள் பால் விற்பனை நிலையங்கள் திறந்து இருந்த நிலையில் காய்கறி கடைகள் மளிகைக் கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை கடந்த 44 நாட்களாக மூட உத்தரவிட்டு இருந்தது இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது நாளை முதல் சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படும் என்றும் மேலும் டாஸ்மார்க் கடையில் மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் குறிப்பிட்டவயதினருக்கு குறிப்பிட்ட நேரங்களில் மது பாட்டில்கள் வழங்கப்படும் என்ற ஒரு சில விதிமுறைகளுடன் டாஸ்மார்க் கடைகள் நாளை திறப்பதற்கு இன்று முதலே தயாராகிக் கொண்டிருந்தது இதனிடையே அனைத்து கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் டாஸ்மார்க் கடை திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில் இன்று நாளை கடை திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் டாஸ்மாக் நிர்வாகம் செய்யத் தொடங்கியது.

திருவண்ணாமலையில் பேகோபுரம் தெரு பகுதி மக்கள் டாஸ்மார்க் கடைகள் நாளை திறக்காமல் இருக்க தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெண்கள் தங்களின் இல்லங்களுக்கு முன்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து சாலையின் இருபுறங்களிலும் இடைவெளிவிட்டு வரிசையாக நின்று வேண்டாம் வேண்டாம் டாஸ்மார்க் கடை எங்களுக்கு வேண்டாம் மூடிவிடு மூடிவிடு டாஸ்மார்க் கடைகளை மூடி விடு என்ற கோஷங்களை எழுப்பி சுமார் பத்து நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு கலைந்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!