17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி….

கீழக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி….

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2020, 7:53 pm

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்புல்லாணி வட்டாரக் கிளையின் சார்பில் கீழக்கரை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 115 நபர்களுக்கு சுமார் 40000 ரூபாய் மதிப்புள்ள கொரொனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

வட்டாரத் தலைவர்  அன்பு செல்வன் தலைமையில் வட்டாரச் செயலாளர் ராமு முன்னிலையில் மாவட்டத் தலைவர் முனியசாமி முதல் நிவாரணப் பொருட்களின் பையினை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியிடம் வழங்கினார். ஆணையாளர் தூய்மைப்பணியாளரிடம் வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்  கிறிஸ்டோபர் கென்னடி, மற்றும் செல்வராஜ், ஆரோக்கிய அருள் ஜோசப், விக்டர் ஸ்டான்லி, இளங்கோ,  ஆனந்த குமார்  ஜேசு ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். இறுதியில் வட்டாரப் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!