17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டாஸ்மாக் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள்..

டாஸ்மாக் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள்..

எழுதியவர்: Askar May 6, 2020, 6:30 pm

டாஸ்மாக் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள்..

டாஸ்மாக் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அன்சர் மில்லத் தமிழக கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் பகுதியை சேர்ந்த தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, மே 7 அன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்து கொரோனா நோய் பரவலுக்கு துணை போவது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.தமிழகத்தில் கொரேனா தொற்று இருப்பதால் அனைத்து மத கூட்டங்களுக்கும் தடை நீட்டிப்பு உள்ள நிலையில் வருகின்ற மே 7 அன்று மது கடைகளை திறப்பதாக நமது தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த மது கடைகளை திறப்பது தேவையற்றது.

டாஸ்மாக் கடையை திறப்பதால் ஏழை எளிய மக்களிடையே மிச்சம் மீதி பொருளாதாரத்தைப் பறிக்கக் கூடிய ஆபத்து உள்ளது . எனது மிளகா டாஸ்மாக் கடையை திறக்கும் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!