ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரத்தில் பெண் ஒருவருக்கு கொரொனா தொற்று சிகிச்சைக்காக அனுமதி!
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி நரசிங்கபுரம் கிராமத்தில் சுமார் (வயது 33) மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை மருத்துவகுழு சார்பாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், அவர் சென்னையில் வசித்து வருவதாகவும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவரது தகப்பனார் முத்துச்சாமி இறப்பு செய்தி அறிந்து அதற்காக சென்னையில் இருந்து நரசிங்கபுரம் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இறப்பு நிகழ்வுல் கலந்து கொண்ட மற்ற யாருக்கேனும் நோய்தொற்று உள்ளதா என நரசிங்கபுரத்தில் வைத்து மருத்துவர் மற்றும் செவிலியர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து நரசிங்கபுரம் செல்லும் பாதைகள் அனைத்தும் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி அடைக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகிறது.




You must be logged in to post a comment.