17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடைசெய்யப்பட்ட பகுதியாக மாறிய மதுரை பைபாஸ் எஸ் எஸ் காலனி ராம் நகர் பகுதி.

தடைசெய்யப்பட்ட பகுதியாக மாறிய மதுரை பைபாஸ் எஸ் எஸ் காலனி ராம் நகர் பகுதி.

எழுதியவர்: mohan May 4, 2020, 7:01 pm

மதுரையில்நேற்று 03.05.2020இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மதுரையில் நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பகுதியான மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை ராம்நகர் பகுதியில் வசித்து வருகிறார் 58 வயது மதிக்கத்தக்க இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சார்பாக அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் மூன்று மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும்… தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகள் செய்து வருகிறார்கள்.. வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் உள்ளே இருக்கும் நபர்கள் வெளியே செல்லாமல் தடுப்புகளை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!