17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது நபி குறித்து ஆபாசமாக பேசிய நபருக்கு பகிரங்க மிரட்டல்.. சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது..

முகம்மது நபி குறித்து ஆபாசமாக பேசிய நபருக்கு பகிரங்க மிரட்டல்.. சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது..

எழுதியவர்: Askar May 3, 2020, 11:27 pm

முகம்மது நபி குறித்து ஆபாசமாக பேசிய நபருக்கு பகிரங்க மிரட்டல்.. சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது..

“தில் இருந்தா எங்க ஏரியால காலை வை பாக்கலாம்” என்று முகம்மது நபி குறித்து ஆபாசமாக பேசிய நபருக்கு சமூக வலைதளங்களில் பகிரங்க மிரட்டல் விடுத்த இளைஞரை கடையநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் திசையன்விளை அருகே ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முகம்மதுநபி குறித்து ஆபாசமாக ஆடியோ வெளியிட்டிருந்தார் இதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும் அந்த ஆடியோவை தாமதமாக பார்த்த கடையநல்லூர் பக்கீர் சாகிப் தெருவைச் சேர்ந்த செய்யது மக்தும் மகன் சல்மான் பாரிஸ் வயது 21 முகம்மது நபி குறித்து ஆபாசமாக பேசிய நபருக்கு ஃபேஸ்புக் மூலம் பகிரங்க மிரட்டல் விட்டார் இதனால் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதனை அடுத்து கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் புகாரின் அடிப்படையில் கடையநல்லூர்போலீசார், சல்மான் பாரிஸ் மீது மதக் கலவரத்தைத் தூண்டுவது ,கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!