17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் ஒரே நாளில் காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னையில் ஒரே நாளில் காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று!

எழுதியவர்: Askar May 3, 2020, 8:41 pm

சென்னையில் ஒரே நாளில் காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னையில் ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றிய 80 காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போல், ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சேத்துபட்டு போக்குவரத்து தலைமை காவலர், தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சூளைமேடு காவல் நிலைய காவலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அயனாவரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர், கொத்தாவல்சாவடி போக்குவரத்து காவலர், மெரினா காவல் நிலைய காவலர், ஐஸ் அவுஸ் தீயணைப்பு உதவி ஆய்வாளர், மயிலாப்பூர் காவல் நிலைய பெண் ஊர் காவல்படை வீரர் ஆகியோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!