18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலைக்குளம் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முதலைக்குளம் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan May 3, 2020, 7:36 pm

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மேலும் கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் தடுக்க அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைகுளத்தில் உள்ள பொதுமக்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பாக உசிலம்பட்டி தொகுதி தலைவர் அருளானந்தம் தலைமையில்,செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் கருப்பசாமி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜாராஜன், விவசாய மகளிரணி தலைவி கனி ஆகியோர் முன்னிலையில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்ட குடிநீர் முதலைக்குளத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!