18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, உணவு வழங்கி மரியாதை..

விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, உணவு வழங்கி மரியாதை..

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2020, 7:08 pm

விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை சால்வை அணிவித்தும் மதிய உணவு பரிமாறியும் மாவட்ட ஆட்சியர் கெளரவப்படுத்தி ஊக்குவித்தார்.

விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்த்துறை சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் பொருட்டு  நகராட்சியில் பணிபுரியும் 180 தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் சால்வை அணிவித்து கெளரவப்படுத்தி முகக்கவம் கையுறை கிருமிநாசினி அடங்கிய தொகுப்பை வழங்கினர்

இதை அடுத்து தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மதிய உணவு பறிமாரி அவர்களை ஊக்குவித்தார் இந்த விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!