17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றியத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி பருப்பு வழங்கிய நிலக்கோட்டை எம்எல்ஏ

நிலக்கோட்டை ஒன்றியத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி பருப்பு வழங்கிய நிலக்கோட்டை எம்எல்ஏ

எழுதியவர்: mohan May 3, 2020, 6:09 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ,பச்ச மலையாண்கோட்டை , ஜம்பு துரைக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள், மோட்டார் இயக்குபவர்கள் , தூய்மை காவலர்கள் பல்வேறு ஊராட்சி பணியாளர்களாக பணி புரியும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் அரிசி மற்றும் காய்கறிகள் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி அதனை இலவசமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி, முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர், பச்ச மலையான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜா , கோட்டூர் ஊராட்சி செயலாளர் சே சுராஜ், கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜோசப், ஜம்பு துரைகோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரேவதி தங்கப்பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார், அதிமுக பொறுப்பாளர் தவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!