18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செக்கானூரணியில் பாஜக மருத்துவர் அணி தலைவர், காவல் துறையினர் இணைந்து கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவி.

செக்கானூரணியில் பாஜக மருத்துவர் அணி தலைவர், காவல் துறையினர் இணைந்து கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவி.

எழுதியவர்: mohan May 3, 2020, 4:50 pm

தமிழகத்தில் கொரோன வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது, மேலும் 144 தடை உத்தரவால் வேலை இழந்துள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பிலும், பல கட்சி சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றன,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல்துறை சார்பில் கொரோனா வைரஸால் வேலையிழந்துள்ள கூலி தொழிலாளர்களுக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு உதவ முன் வந்த நிலையில் மதுரை மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய பாண்டியன் உதவும் விதமாக பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்க முன்வந்தார்,

இதனை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் 300க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி,காய்கறிகள், மற்றும் மளிகை பொருட்கள் மதுரை காவல்துறை உயர் அதிகாரியான ஏடிஎஸ்பி கணேசன்,உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா, மற்றும் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் அனிதா ஆகியோர் முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்களுக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள் கொண்ட தொகுப்பை வழங்கினார். மேலும் ஏஸ் ஐ நாகராஜ், திருஞானம், மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!