18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொல்லங்கொண்டான் கிராமப் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்..

கொல்லங்கொண்டான் கிராமப் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2020, 2:15 pm

கொரோனா வைரசால் 144 தடை உத்தரவை அடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வீட்டுக்குத் தேவையான 40,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் கிராமப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து வாழக்கூடிய நடுத்தர மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக சென்றுகொண்டிருக்கிறது.

தற்போது இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலக் கூடிய மாணவ, மாணவிகளை அழைத்து வந்து அவர்களுக்கு வீட்டுக்கு தேவையான 5 கிலோ அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவருடைய சொந்தப் பணத்தில் இருந்து சுமார் நாற்பதாயிரம் ரூபாய் செலவில் பொருட்களை அவர்களுக்கு இலவசமாக வழங்கினர். ஒவ்வொரு குழந்தைகளும் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வைத்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!