17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் டவுன் மீன் மார்க்கெட் இடம் மாறியது

இராமநாதபுரம் டவுன் மீன் மார்க்கெட் இடம் மாறியது

எழுதியவர்: mohan May 3, 2020, 2:32 pm

தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து மக்கள் சமுக இடைவெளியை பின்பற்ற தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.இதனையடுத்து மார்ச் 25 முதல் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக ராமநாதபுரம் அரண்மனை, சந்தைக் கடை, பாரதி நகர், சின்னக்கடை பகுதிகளில் இயங்கிய காய்கறி கடைகள் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், டி-பிளாக் பகுதிகளில் மாறின. ராமநாதபுரம் சாலை தெரு பகுதியில் இயங்கிய டவுன் மீன் அங்காடியில் இடப்பற்றாக்குறையால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 529 ஊராட்சி பகுதிகளில் உள்ள காய்கறி, இறைச்சி கடைகளில் போதிய சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனடிப்படையில், ராமநாதபுரம் சாலை தெருவில் செயல்பட்ட டவுன் மீன் அங்காடி, ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு போதிய இடைவெளி கடைபிடிக்கப்படுவதை நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், பொறியாளர் நீலி ஈஸ்வரன், உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் ஆய்வு செய்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!