17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan May 3, 2020, 2:03 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளதுஅத்யாவசிய கடைகளான காய்கறி மருந்துக் கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க வேண்டாமென அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஓய்வின்றி உழைக்கும் தூய்மைப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் கபசுர குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீர் சூரண பாக்கெட் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி வழங்கினார்.மொத்தம் 130 பணியாளர்களுக்கு கபசுர குடிநீர்; சூரணப்பொடி மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!