தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளதுஅத்யாவசிய கடைகளான காய்கறி மருந்துக் கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க வேண்டாமென அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருபே பொட்லுப்பட்டி மூணான்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் மகன் அஜித்குமார் (23).இவருக்கு திருமணமாகவில்லை.மது
பழக்கத்திற்கு அடிமையான கடந்த 3 மாதத்திற்கு முன் மதுரையிலுள்ள ஒரு மது அருந்துவோர் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.சென்ற மாதம் வீடு திரும்பியுள்ளார்.கடந்த ஒரு மாதமாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது மாத்திரை காலியானதால்; ஊரடங்கால் மதுரை சென்று வாங்க முடியாத நிலையில் மீண்டும் மது கேட்டு விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இது குறித்து அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் போலிசாருக்கு தகவல் கொடுக்க உசிலம்பட்டி தாலுகா போலிசார் பிரேதத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை .போலிசார் விசாரணை
எழுதியவர்: mohan May 3, 2020, 1:54 pm




You must be logged in to post a comment.