தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜீனன். வுpவசாயியான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கிராம மக்கள் வேலையின்றி தவிப்பதைக் கண்டு அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ எண்ணினார்.இதன்படி அர்ஜீனன் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தனது தோட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.அடுத்த மாதம்தான் நிலக்கடலையை பறிக்கக் கூடிய சூழ்நிலையில் தற்போதே நிலக்கடலையை ஆட்களை வைத்து பறிக்கத் தொடங்கியுள்ளார். இதற்காக தனது கிராமத்தில் வறுமையால் வாடும் நபர்களைத் தேர்ந்தெடுத்து தினமும் 20 நபர்களுக்கு சுழற்ச்சி முறையில் வேலை கொடுத்து வருகிறார்.இவர்களும் சமூக இடைவெளி விட்டு நிலக்கடலையை பறித்து வெயிலில் காய வைக்கின்றனர்.இதற்காக ஒவ்வொரு நபருக்கும் தினமும் ரூ200 சம்பளமும் ஒருபடி நிலக்கடலையும் வழங்கி வருகிறார்.இது பற்றி விவசாயி அர்ஜீனன் கூறுகையில்
தன் கிராமமக்கள் வறுமையால் கஷ்டப்படுவதைக் காண முடியாமல் அவர்களுக்கு சம்பளத்துடன் வேலை கொடுக்கும் நோக்கில் இச்செயலை செய்வதாகவும் ஒரு மாத அறுவடைக்கு முன் பறிக்கப்பட்ட நிலக்கடலையை இப்போதே பறித்து ஒரு வாரம் உலர (காய) வைத்து பின் உடைத்து கடலைப் பருப்பாக்கி ஊரடங்கு முடிந்தபின் சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்தில் சிறு உதவி செய்தாலே பேனர் அடித்து விளம்பரப்படுத்தும் இக்காலத்தில் தன் கிராமமக்கள் துயர் தொடைக்க தன்னாலான உதவியைச் செய்து வரும் இவ் விவசாயியை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
உசிலை சிந்தனியா



You must be logged in to post a comment.