தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளதுஅத்யாவசிய கடைகளான காய்கறி மருந்துக் கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க வேண்டாமென அரசு அறிவுறுத்தி உள்ளது.மேலும் கிராமப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களுடன்
மருத்துவ உதவியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களுடன் பணியாற்ற பெண்கள் உள்பட 5 உதவியாளர்கள் 108 வாகனத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து சோழவந்தான் சென்றுள்ளனர்.108 வாகனம் விக்கிரமங்கலம் அருகே செல்லும் போது நிலைதடுமாறி கவிழ்ந்தது.இதில் வண்டியிலிருந்த நந்தினி முத்துமாரி மற்றும் டிரைவர் உதயக்குமார் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மற்றொரு வாகனம் மூலம் உசிலம்பட்டி அழைத்து வரப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து விக்கிரமங்கலம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே மருத்துவ உதவியாளர்களை இறக்கி விடச் 108 வாகனம் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.
எழுதியவர்: mohan May 3, 2020, 1:44 pm




You must be logged in to post a comment.