தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் அன்றாட வேலையிழந்து தவித்து வருகின்றனர்
.இந்நிலையில் இவர்களின் துயரத்தை அறிந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் விஜய பாண்டியன் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட வீட்டு பலசரக்கு பொருட்களை கொடுக்க முடிவு செய்தார்.இதனையடுத்து உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் காவல்துறையினர் 250க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.சுமை தூக்கும் தொழிலாளர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்களை வாங்கிச் சென்றனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.