17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலிபர் படுகொலை.

வாலிபர் படுகொலை.

எழுதியவர்: mohan May 3, 2020, 1:06 pm

மதுரை மாடக்குளம் கண்மாய் அருகில் உள்ள ஒரு தோப்பில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக எஸ் எஸ் காலனி போலீசுக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் ரத்த காயங்கள் உடன் இறந்து கிடந்தார். அவரின் உடம்பில் எண்ணற்ற அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.இதனை தொடர்ந்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் கைரேகை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது.எஸ். எஸ். காலனி போலீசார்பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நபரின் பெயர் கண்ணன் என்கிற தோடு கண்ணன் (வயது 38) என்பது தெரியவந்தது. இவருக்கு அங்குள்ள பெண்கள் பலருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.இதற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!